Thursday, 28 November 2013

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய..


நாம் பெரும்பாலும் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்வதேன்றால் டி.வி.டி களையோ அதிகம் நம்பி இருப்போம்.

மேலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிக்கிறோம்.

ஆனால், சில வேளைகளில், நம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள, ஐ.எஸ்.ஓ. பைல் பயன்படுத்தி, விண்டோஸ் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட விரும்புவோம்.

இதில் பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திடாமல், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலை படிக்க இயலாது. இங்கு, விண்டோ ஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலைப் பயன்படுத்தி, பூட் செய்யக் கூடிய யு.எஸ்.பி. டிஸ்க்கினை எப்படித் தயார் செய்வது எனப் பார்க்கலாம்.

(இதன் மூலம் நாம் டிவிடி சிஸ்டம் டிஸ்க் மூலம், விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது போல, இதனைப் பயன்படுத்தியும் இன்ஸ்டால் செய்திட முடியும்.)
இதற்கான முதல் தேவை, விண்டோஸ் சிஸ்டத்தின் ஐ.எஸ்.ஓ. பைல். இதனைத் தேடிப் பிடித்து, காப்பி செய்து, கம்ப்யூட்டரின் ட்ரைவ் ஒன்றில் முதலில் பதிந்து வைத்திருக்க வேண்டும்.

தேவையான சாதனங்கள்: பூட் செய்திடக் கூடிய, யு.எஸ்.பி. ட்ரைவினத் தயார் செய்திட, குறைந்தது 4 ஜிபி இடம் உள்ள, பிளாஷ் ட்ரைவ் ஒன்று தேவைப்படும். தயார் செய்து எடுத்துக் கொண்டு, பின்னர் கீழே தரப்பட்டுள்ளது போல செயல்படவும்.
மேலே சொன்னபடி தயார் செய்த யு.எஸ்.பி. ட்ரைவினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி ட்ரைவில் இணைக்கவும்.

பின்னர் Start மெனு செல்லவும். அங்கு cmd என டைப் செய்திடவும். இங்கு கிடைக்கும் தேடல் முடிவுகளில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து diskpart என டைப் செய்து என்டர் தட்டவும். diskpart என்பது, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ட்ரைவ் பார்ட்டிஷன் மற்றும் ட்ரைவ்களைக் கையாளும் ஒரு யுடிலிட்டி புரோகிராம்.

diskpart புரோகிராம் இயங்கத் தொடங்கும் போது, கமாண்ட் ப்ராம்ப்ட் எனப்படும் கட்டளைப் புள்ளி DISKPART என மாறியிருப்பதனைக் காணலாம்.

அடுத்து list volume என்ற கட்டளைச் சொல்லை டைப் செய்திடவும். இந்தக் கட்டளை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிஸ்க் வால்யூம்கள் அனைத்தையும் பட்டியலிடும்.

இன்டர்நெட் விட்டு விட்டு வருதா உங்களுக்கு?

இன்றைய காலகட்டத்தில் இணைய இணைப்பு மிக அத்தியாவசிய தேவையாகிவிட்டது மக்களுக்கு எனலாம் நாம் இணையம் பயன்படுத்தும் ஏற்படும் பெரும் பிரச்சனை ஒன்று உள்ளது.

அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை இதுதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது.

இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும் மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது.

பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து பார்க்கிறோம். நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம்.

கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங்களை செய்து பார்த்திருக்கிறிர்களா நண்பரே இதை பாருங்கள் இதுதான் உங்களது இணைப்பு தீடீரென்று தடைபடுவதற்கு காரணம் நண்பரே இதை ஒரு முறை செக் செய்து பாருங்கள்....

வைரஸ் தாக்கிவிட்டதா பென்டிரைவை?

இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருப்பது பென்டிரைவ் என்ற ஒரு பொருள் தான் தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது பென்டிரைவ்கள்.

இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவைஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.

ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது.

பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போமா நண்பரே இதோ அந்த தகவல் உங்களுக்காக...

இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

இன்று ஒரு கம்பியூட்டர் எந்த பிரச்சனையும் இயங்குவதற்கு முக்கியமான காரணம் ஆப்ரேடிங் சிஸ்டம்தான்.

ஆனால், கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் அதிகம் கண்டு கொள்வதில்லை இதுவே உண்மை.

நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.

ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை பற்றி சிறிது காண்போமா....

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் முறை!!!

இன்று ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது.

ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம்.

நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் இருப்பது உற்சாகம் தரும் என்பதற்காக, இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து, அக்கவுண்ட் நீக்கும் வழியை நாடலாம்

Wednesday, 27 November 2013

போட்டோகிராபர்களுக்கு உதவும் வெப்சைட்ஸ்

போட்டோஷாப் மூலம் பல போட்டோக்களை மிகவும் அழகாக்கலாம், உங்கள் போட்டோக்களை அழகாக்குவதற்கென்றே பல வெப்சைட்கள் இணையத்தில் உள்ளன.

மேலும் போட்டோகிராபர்கள் தங்களது திறமையை காண்பிக்கவும் இந்த வெப்சைட்கள் உதவுகின்றன.

இதோ போட்டோகிராபர்கள் மற்றும் போட்டோ வொர்க் கிற்காக டாப் 10 வெப்சைட்ஸ்.....

ஆன்லைனில் முக்கியமான பைல்களை சேமிக்க!

உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா ?? அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா ?

உங்கள் கோப்புகள் அனைத்தையும் பத்திரமாக ஓர் இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டுமா ? அப்படியாயின் JustCloud என்னும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள அணைத்து கோப்புகளையும் மிகவும் பாதுகாப்பாக இணையத்தில் சேர்த்து வைக்க உதவுகிறது.

ஒரு முறை சேமித்து விட்டால் நீங்கள் பாத்து வருடம் கழித்து திரும்ப பார்க்கும் பொது கூட அதனை கோப்புகளும் மிகவும் பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் .

அது மட்டும் அல்ல உங்கள் கைபேசி மூலம் எங்கு இருந்தும் உங்கள் கோப்புகளை பார்வையிடலாம் , பகிர்ந்துகொள்ளலாம் .சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இது உங்கள் இணையக்கணினி போன்றது .

மைக்ரோசாப்ட் எக்ஸல் ஸ்ப்பெரட்ஷிட்டில் ஓவியம்

உங்களால் மைக்ரோசாப்ட் எக்ஸல் ஸ்பெரட்ஷிட்டில் ஓவியம் வரைய முடியுமா? நிச்சயம் முடியாது.

ஆனால், ஜப்பானை சேர்ந்த டாட்சோ ஹாய்ருச்சி என்ற 73 வயது முதியவர் மைக்ரோசாப்ட் எக்ஸல் ஸ்பெரட்ஷிட் மூலம் அழகிய ஓவியங்களை வரைந்து அசத்துகிறார்.

ஆம், இவை அனைத்தும் டிஜிட்டல் ஓவியங்கள்.

உண்மையில் இவை பார்ப்பதற்க்கு மிக அழகாக இருக்கின்றது, அவற்றை சற்று நீங்களே பாருங்கள்....

சி.டி ஸ்கேரட்சா! கவலை வேண்டாம்!

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தான்.


சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும்.

அப்போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.

ஆப்பிளின் அடுத்த அவதாரம்!

ஆப்பிளின் பிராடக்ட்ஸ் க்கு இன்று உலகம் முழுவதும் இருக்கும் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த தலைமுறைக் கணிப்பொறியை உருவாக்க ஆரம்பித்து விட்டது.

அவை நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே தொழில்நுட்ப்பத்துடன் வெளிவர இருக்கிறது.

இது உலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பதை நாம் அறிந்ததே.

இதோ ஆப்பிளின் அடுத்த தலைமுறைக் கணிப்பொறியை படத்தில் காணலாம்...

இ-மெயிலில் இந்த விசயங்கள் உங்களுக்குத் தெரியுமா!!!

இன்று இணையம் வைத்திருக்கும் அனைவரிடமும் ஒரு இ மெயில் கணக்கு இருக்கும்.

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் கம்போஸ் செய்யும்போது அதை அனுப்ப  நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும்  அனுப்ப செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் (Cc, Bcc).

இதோ கீழே அதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது

உங்க கம்பியூட்டர் வேகத்தை அதிகரிக்க!!

உங்கள் கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்க உங்களுக்கு சில டிப்ஸ்கள்.

உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் . புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.

 பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

 G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒருinstant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும். 

கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http:// www.revouninstal ler.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

 Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம். 

Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizingஎன்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும். 

Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும்நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது. 

கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசுஎதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க கொண்டே இருக்கவேண்டும். 

ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

உலகின் வேகமான கம்பியூட்டர் சீனா வெளியிட்டது!!!


இன்று கம்பியூட்டர் இல்லாத துறையே இல்லை என்று கூறலாம் அந்த அளவிற்க்கு இந்த கம்பியூட்டரின் தாக்கமானது உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது.

கம்பியூட்டரை கொண்டு நாம் ஏற்கனவே பல உயரங்களை எட்டி விட்டோம்.

இன்று அந்த உயரத்தையே தூக்கி சாப்பிடும் விதமாக சீனா புதிய கம்பியூட்டர் ஒன்றை வடிவமைத்துள்ளது.

இது ஒரு நிமிடத்தில் 33 செயல்களை செய்யும் திறன் கொண்ட சூப்பர் கம்பியூட்டர் ஆகும்.

இதன் மூலம் நாம் அடுத்த தலைமுறைக் கம்பியூட்டரில் நாம் முதற் படியை எடுத்து வைத்துள்ளோம்.

இதன் பெயர் டினாஹே 2 என்று வைத்துள்ளனர்.

கூகுளுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் அதிரடி!

இன்று உலகத்தையே தன் கையில் வைத்துள்ள கூகுளையே பிரான்ஸ் அரசு மிரட்டியுள்ளது.

அமெரிக்காவின் இணையதளமான கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் 3 மாதங்களில் ‘பிரைவசி' பாலிசியை கடைபிடிக்காமல் தகவல் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தால் ரூ.117.94 கோடியை அபராதமாக கட்ட வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

இன்றை நிலையில் இணையதளத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்றாலும் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருபவையாக இருப்பவை கூகுள் தளமும், விக்கிபீடியா தளமும் தான்.

ஆனாலும் இன்றைய நிலையில் உலகம் முழுவதையும் தனது கரங்களால் சுற்றி வளைத்து தன்னை நிலைநாட்டி வைத்திருப்பது கூகுள் நிறுவனம்தான்.

அந்த நிறுவனத்தையே பிரான்ஸ் மிரட்டியுள்ளது பெரும் பரபரப்பை கூட்டியுள்ளது இதோ அந்த தகவல்கள்....

கம்பியூட்டர் மற்றும் லேப்பை பராமரிக்க சில நச் டிப்ஸ்!

இன்றைய காலகட்டத்தில் கண்ப்பபொறி என்பது மனிதனின் மிக முக்கியமான தேவை ஆகிவிட்டது.

விண்வெளியில் ராக்கெட் செலுத்துவது முதல், சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது வரை அனைத்து பணிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது கம்ப்யூட்டர்

அதன் முன்பாக அமர்ந்துவிட்டால் மட்டும் போதாது... முறையாகக் கையாள்வது பற்றிய பொது அறிவும் அவசியம்! கம்ப்யூட்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது, நல்ல முறையில் பராமரிப்பது மிக முக்கியம் ஆகும்.

உலகை கலக்க வருது அடுத்த இன்டெல்

இன்று உலகில் பல பிராஸஸர்கள் வந்து விட்டன, ஆனால் அவையனைத்திற்க்கும் தலைமை என்று சொன்னால் இன்டெல்தான்.

இன்டெல் நிறுவனம் கணினியின் ப்ராஸஸர்கலுக்கு பெயர் பெற்ற ஒன்று. பல கணினி நிறுவனங்களுக்கும் இன்டெல் ப்ராசசர்களை உள்ளடக்கி கணினிகளை வெளியிட்டு வருகின்றன.

நேற்று இன்டெல் நிறுவனம் டெல்லியில் தனது புதிய 4-ஆம் தலைமுறை ப்ராசசர்களை அறிமுகம் செய்தது.

இன்டெல் நிறுவனம் இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை ப்ராசசர்களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கொஞ்சம் பாருங்க

கம்பியூட்டரில் பல புதுமைகள் நாள்தோறும் பல புதுமைகள் வந்துகொண்டிருக்கின்றன. மக்களை எளிதில் கவரும் வகையில் இதன் படைப்புகள் உள்ளன.


கம்பியூட்டரில் கனெக்ஷ்னுக்கு பயன்படுத்துபடும் யூஎஸ்பி கப் பற்றி நமக்கு தெரியும். ஆனால் இங்கு உள்ள யூஎஸ்பி கப் கள் சற்று வித்தியாசமானவை.

சில கிரேஸி மனிதர்கள் இது போன்ற பல வித்தியாசமான பொருள்களை உருவாக்குகின்றனர்.

கிழே உள்ள சிலைட்சோவில் கிரேஸி யூஎஸ்பி கப்களின் படங்களை நீங்களே பாருங்க

உங்களது பழைய கணினியை இப்படியும் பயன்படுத்தலாம்!!!

இன்றைய காலகட்டத்தில் கண்னி என்றவொன்று மனிதனின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது என்றே கூறலாம்.

 நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில் நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணமாதான் உள்ளன.

நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே இருக்கின்றோம்,இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன.

அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில் இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வரும்.

 சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய கணினிகளை உபயோகித்து கொள்ளலாமே என்ற யோசனை வந்தது இதோ அந்த ஐடியாக்கள்....

ஹச்பி நிறுவனத்தின் 6 புதிய படைப்புகள்!!!

ஹச்பி நிறுவனம் கடந்த மே மாதம் ஹச்பி சிலேட்புக் X2 மற்றும் ஹச்பி ஸ்பிலிட் X2 என இரு சாதனங்ளை பற்றிய தகவல்களை வெளியிட்டது.


இன்று அந்த இரு சாதனங்கள் மற்றும் அதனுடன் மேலும் 4 சாதனங்களை ஹச்பி நிறுவனம் டெல்லியில் வெளியிட்டுள்ளது.

ஹச்பி சிலேட்புக் X2, ஹச்பி ஸ்பிலிட் X2, ஹச்பி என்வி ரோவ் 20, ஹச்பி பெவிலியன் 11 டச் ஸ்மார்ட் நோட்புக், ஹச்பி என்வி டச் ஸ்மார்ட் 14 அல்ட்ராபுக் மற்றும் ஹச்பி சிலேட் 21 ஆல்-இன்-ஒன் ஆகியவைகளே இந்த சாதனங்களின் பெயர்கள்.

ஹச்பி சிலேட்புக் X2, ஹச்பி ஸ்பிலிட் X2 இவைகள் இரண்டையும் டேப்லெட் மற்றும் லேப்டாப்பாக பயன்படுத்தலாம். இந்த சாதனங்கள் அனைத்தும் இந்த மாதத்தின் கடைசியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

கீழே உள்ள சிலைட்சோவில் இந்த புதிய சாதனங்களின் படங்கள் மற்றும் சிறப்புகளை பார்ப்போம்.

ஆப்பிள் மேக் ஓஎஸ் ரகசியங்கள்!!!

ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் பற்றி நமக்கு தெரியும். மெஷின்டோஷ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்பதே மேக் ஓஎஸ் என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மேக் ஓஎஸ் ஜனவரி 24, 1984ல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதில் பல வெர்சன்கள் வந்துவிட்டன.

இப்பொழுது உள்ள ஆப்பிள் மேக் ஓஎஸ் பல புதுமைகளை கொண்டுள்ளது. இதில் உள்ள சில ரகசியங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஹாக்கர்கள் ஜாக்கிரதை!!!

உங்களிடம் மைக்ரோசாப்ட் விண்டோஸ்(xp) இயங்குதளம் உள்ளதா அப்படியேன்றால் அதன் உடனடியாக மேம்படுத்தப்பட்ட பதிப்பொன்றுக்கு மாறிவிடுங்கள்.

ஆம், அதில் சில மால்வேர்கள் உள்ளாதாக தற்போது தகவல்கள் உள்ளன அதன் லேட்டஸ்ட் ஆப்டேட்டை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும், விண்டோஸ் எக்ஸ்ப்பியை ஹேக்கர்கள் இலகுவாக ஊடுருவி மிகப் பெரிய கணினி (சைபர்) தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதே இந்த அறிவுறுத்தலுக்கான காரணமென தெரிய வருகின்றது.

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான உதவிகளை அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 இதனால் விண்டோஸ் எக்ஸ்பிக்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எவையும் மைக்ரோசாப்டிடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடும். 

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது.

 எனவே XP வைத்திருக்கும் நண்பர்கள் ஆப்டேட் வெர்ஷனை முதலில் டவுன்லோட் செய்யுங்கள்.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் நடக்கும் அதிசியங்கள்!!!

ஒரு நிமிஷத்துல என்னடா ஆகிட போகுது என்று வழக்கமாக நாம் சொல்வதுண்டு. ஆனால் இன்டெர்நெட்டில் ஒரு நிமிடத்தில் பல அதிசியங்கள் நடக்கின்றன அதை இங்கே பாருங்கள்.

ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் 2,16,000 போடோக்கள் பரிமாறப்படுகின்றன. அமேசான் இணையத்தில் ஒரு நிமிடத்தில் 50 லட்சத்திற்க்கு விற்பனை நடந்துள்ளது. பேஸ்புக்கில் ஒரு நிமிடத்தில் 18 லட்சம் லைக்குகள் வந்துள்ளன.

 கூகுளில் ஒரு நிமிடத்தில் 20 லட்சம் சேர்ச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 72 மணி நேரம் பார்க்க அளவிலான வீடியோக்கள் யூடியுபில் அப்லோட் ஆகியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் நடக்கின்றன.

Qmee என்ற இணையத்தளம், பிசி மேக், பிசினஸ் இன்ஸைடர் மற்றும் இன்னும் பிற இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் என்ன நடக்கிறது என்ற கிராப்பை வடிவமைத்துள்ளது.

இது போன்று goglobe எனும் இணையத்தளம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஒரு இன்போ கிராபை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 மடங்கு அதிகமான கூகுள் சேர்ச்கள் ஒரு நிமிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 கீழே உள்ள சிலைட்சோவில், ஒரு நிமிடத்தில் இன்டெர்நெட்டில் என்ன நடக்கிறது என்பதை சித்தரிக்கும் இன்போகிராப் மற்றும் இன்னும் சில தகவல்களை பாருங்கள்.

பழைய கம்பியூட்டருக்கு பேரீச்சம் பழம்!!!

இன்றைய உலகின் அதிகம் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவு பொருட்கள் தான் உலகில் அதிகம் தேங்கி கிடக்கின்றன.

இந்த பொருட்களை எப்படி மறுசுழற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் இந்த கழிவுகளின் அளவு அதிகரித்த வண்ணமே உள்ளன.

 இதோ இங்கே மலை போல் தேங்கி நிற்கும் கம்பியூட்டர் கழிவுகளை பாருங்கள் பாஸ் இதோ...

இங்கயுமா லேப்டாப் யூஸ் பண்ணுவீங்க!!!

இன்றைய இளைஞர்கள் பாத்ரூமில் கூட மொபைலில் பாட்டு வைத்து கொண்டு தான் குளிக்கவே செல்கிறார்கள் எனலாம்.

இங்குதான் இப்படி என்றால் வெளிநாட்டில் நிலைமை அப்படியே தலைகீழ் பாஸ் அங்கே லேப்டாப் உடன் தான் பாத்ரூமுக்கே செல்கிறார்கள்.

டாய்லெட்டிற்கு சென்றால் கூட அவர்கள் லேப்டாப்புடன் தான் போறாங்களாமா பாஸ் இதோ அந்த படங்களை நீங்களே பாருங்கள்...

மறைந்துபோன டெக்னாலஜி வார்தைகள்!!!

காலங்கள் செல்ல செல்ல பல விஷியங்கள் மறைந்து போகின்றன. மொழிகளும், வார்தைகளும், பேச்சுகளும் கூட உருமாறி வருகின்றன. டெக்னாலிஜிகளும் இதற்க்கு விதிவிளக்கல்ல.

நேற்று பயன்படுத்தபட்ட டெக்னாலஜிகள் இன்று புதிய கண்டுபிடிப்புகளால் மறைக்கப்படுகின்றன. இன்றைய கண்டுபிடிப்புகள் நாளை மறைந்து போகலாம்.

 ஒரு காலத்தில் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இன்று பெரும்பாலும் மக்களால் பயன்படுத்துவதில்லை. அது போன்ற சில டெக்னாலஜி வார்த்தைகள் மற்றும் சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

இந்த லேப்டாப் விலை 20 ஆயிரம் தான் பாஸ்!!

நீங்க லேப்டாப் வாங்க போறீங்களா அப்படினா உங்களுக்கு இதோ ஒரு சூப்பர் காத்துக்கொண்டிருக்கிறது ஆமா பாஸ் 20 ஆயிரத்துக்கும் விலை குறைவான சில லேப்டாப்கள் இங்கு உள்ளது பாஸ்.

 உண்மையில் இவை அனைத்தும் மிக அருமையான லேப்டாப்ஸ் பாஸ் இதோ அதை நீங்களே பாருங்கள் விலை குறைவான இந்த லேப்களை...

கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்க நச் டிப்ஸ்!!!

இன்றைய உலகத்தில் பெரும்பாலான விஷியங்கள் கம்பியூட்டர் மையமாக மாறி வருகின்றன. கம்பியூட்டர் இல்லாமல் எதுவும் இயங்காது என்று சொல்லும் அளவுக்கு அதன் பயன்கள் அதிகமாகி வருகின்றன. 

பெரும்பாலும் இன்று அனைவரது வீட்டிலும் கம்பியூட்டர்கள் அல்லது லேப்டாப்கள் இருக்கின்றன. அதை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோமோ அதில் பாதி அளவு கூட அதை பராமரிப்பதில் நாம் கவனம் செலுத்துவதில்லை. 

நிறைய பேருக்கு கம்பியூட்டர் மிகவும் ஸ்லோவாக இருக்கிறது என்ற பிரச்சனை இருக்கும். உங்கள் கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்க சில டிப்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

வின்டோஸ் 8 ஹாக்கிங் அபாயம்: ஜெர்மனி எச்சரிக்கை

ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

ஜெர்மனியின் பெடரல் ஆபீஸ் இன்பர்மேஷன் செக்கியூரிட்டி அமைப்பு கடந்த புதன்கிழமை தனது வெப்சைடில், ஜெர்மனியின் பெடரல் அரகசாங்க ஏஜென்சி இந்த பிரச்சனைக்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இந்ந பிரச்சனை எங்கு ஆரம்பிக்கிறது என்றால் வின்டோஸ்8 கம்பியூட்டரில் டிரஸ்டெட் பிளாட்பார்ம் மாடியூல் (Trusted Platform Module) என்ற சிப் உள்ளது. இது கம்பியூட்டரின் பாதுகாப்புக்காக 

வின்டோஸ்8 உடன் இணைக்கப்பட்டுள்ளது. வின்டோஸ்8 மற்றும் TPM சிப் இணையும் பொழுது ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஹார்ட்வேர்களின் கட்டுபாட்டை இழந்து விடுகிறது இதனால் பிரச்சனை ஆரம்பிக்கிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதனை மறுத்த மைக்கிரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ்8 கம்பியூட்டரை பயன்படுத்துபவர்கள் TPM சிப்பை வேண்டுமானால் செயல் இழக்க செய்துவிடலாம் அந்த வசதி அதில் உள்ளதாக தெரிவித்தது. வின்டோஸ் 8.1 ஓஎஸ் அக்டோபர் 18ஆம் தேதி வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆசஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர்!!

ஆசஸ் இந்தியா, கம்பியூட்டர் நிறுவனங்களில் முன்னனி பிராண்ட்களில் ஒன்றாகும். புதுமையான தொழில்நுட்பம் மற்றும் மக்களுக்கு புதுமையான கம்பியூட்டர் அனுபவத்தை அளிக்கும் இந்நிறுவனம் தனது இரண்டாவது எக்ஸ்குளூசிவ் ஸ்டோரை இன்று திறந்துள்ளது.

இந்த புதிய ஸ்டோரில் ஆசஸ் நிறுவனத்தின் அல்ட்ராபுக், நோட்புக், நெட்புக், டேப்லெட் மற்றும் பேப்லெட் என அனைத்தும் கிடைக்கும். இந்த புதிய ஸ்டோரின் அட்ரஸ் #G2, KAJ பிளாஸா, #838, அண்ணாசாலை, சென்னை-600 002.

 புதுமைகள், குவாலிட்டி, சிறந்த சேவை மற்றும் குறைந்த விலையில் தரமான பொருள் என இது போன்ற விஷியங்களில் ஆசஸ் நிறுவனம் முதன்மையில் உள்ளது. இப்பொழுது இந்நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் எண்ணத்தில் உள்ளது. தனது ரீடெய்ல் ஸ்டோர்களை சிறு நகரங்களிலும் தொடங்க இது திட்டமிட்டுள்ளது.


டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேலிக்கட், கோவா, தானே, ராய்பூர், பில்லை, துர்காபூர், கான்பூர், கொச்சின், மைசூர், புனே, கோயம்பத்தூர், சென்னை என இந்தியாவின் இன்னும் பல நகரங்களிலும் ஆசஸ் நிறுவனத்தின் ஸ்டோர்கள் உள்ளன.

 சென்னையில் நடந்த இன்றைய திறப்பு விழாவில் ஆசஸ் இந்தியா நிறுவனத்தின் ரீஜனல் தலைமை அதிகாரி- தெற்க்கு ஆசியா மற்றும் கன்ட்ரி மேனேஜர் திரு.பீட்டக் ஜாங் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் சென்னை மக்கள் ஆசஸ் நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பை தருகின்றனர் என தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், தங்களது சேவையை சென்னை மக்களுக்கு மேலும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்னையில் இரண்டாவது ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். இந்நிறுவனத்தின் அனைத்து சாதனங்களும் இந்த புதிய ஸ்டோரில் கிடைக்கும்.

இவங்க தான் கம்பியூட்டர வெளியிடுவாங்க!

இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஒரு பெட்டியாக மாறிவிட்டது கம்பியூட்டர் அது இல்லாத ஒரு வாழ்கையை இனி வருங்காலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது எனலாம்.


அந்த அளவுக்கு இந்த கம்பியூட்டருக்கு நாம் அனைவரும் அடிமைகள் ஆகியிருக்கிறோம்.

சரிங்க இந்த கம்பியூட்டர் வெளியீட்டு விழாக்களை நீங்க பாத்துருக்கீங்களா பாக்கலைனா இங்க வாங்க பாஸ் இதுதான் அந்த வெளியீட்டு விழாவின் படங்கள்.

அழகான பெண்கள் எவ்வாறு அதை வெளியிடுகிறார்கள் என்று நீங்களே இங்க பாருங்க....


கம்பியூட்டர் சூடு ஆகுதா இதோ தீர்வு

நாம்ம கம்பியூட்டர் யூஸ் பண்ணும் போது நமக்கு ஏற்படும் பிரச்சனை CPU சூடாகிவிடுவது அப்படி ஆகி விட்டால் போதும் ஒவ்வொருத்தர் ரொம்ப டென்ஷன் ஆகிருவாங்க.

தொடர்ந்து கம்பியூட்டரை ஓய்வு இல்லாமல் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

 சரி அப்படி கம்பியூட்டர் சூடு ஆயிருச்சுனா அத குறைக்கிறதுக்கு மார்கெட் ல நிறைய பேன்கள் இருக்குங்க அதை யூஸ் பண்ணி நாம்ம கம்ப்யூட்டரின் CPU சூட்டினை நாம் குறைக்கலாம், இதோ அந்த பேன் மாடல்களை பாருங்க பாஸ்....

ஹார்ட்பீட் தான் உங்க மொபைல் பாஸ்வேர்டு..

இந்த உலகமானது நாளுக்கு நாள் தினம் தினம் மாறி வருகிறது எனலாம் அந்த வகையில் தினந்தோறும் பல புதுமைகளை சந்தித்து வருகிறது இந்த உலகம் அதுவும் டெக்னாலஜி துறையில் உலகம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கிறது.


அந்த வகையில் உங்களது கம்பியூட்டர் அல்லது பிற பாஸ்வேர்டை மறைக்க எவ்வளவோ டெக்னிக்ஸ் வந்தாச்சு அந்த வகையில் தற்போது புதிதாக வந்திருப்பது ஹார்ட் பீட் பாஸ்வேர்டு பாஸ்.


இந்த ஹார்ட் பீட் பாஸ்வேர்டு என்பது நமது இதயத்துடிப்பை வைத்து பாஸ்வேர்டை கண்டறியும் ஒரு முறையாகும் இதன் மூலம் உங்களது ஐ போன் அல்லது ஸ்மார்ட் போன் என எதையும் எளிதாக இயக்கலாம்.


மேலும் உங்களது வங்கி வரவு செலவு கணக்குகள் என அனைத்தையுமே இதில் நம்மால் செய்ய முடிகிறது இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.


ஆனால் இதுகுறித்த எதிர்பார்புகள் இப்போதே அமெரிக்கர்களிடம் தொற்றி கொண்டுள்ளது இதை அவர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதோ அந்த பேன்டின் வீடியோவை நீங்களே பாருங்கள்....


Tuesday, 26 November 2013

உங்க பாஸ்வேர்ட் எப்படி இருக்கு?

நமது மனித வாழ்கையிஸ் ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய மொத்த வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.


நாம் ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின்
நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரிய தாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். இதோ உங்கள் பாஸ்வேர்டின் வலிமையை அறிய நீங்கள் அறிய வேண்டுமா....

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இன்று உலகில் உள்ள அனைவருக்கும் தங்களது முக்கிய தேவையாத இன்டர்நெட் மாறியுள்ளது மேலும் உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் தொகையில் இந்தியா உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர். அதுவே 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டது. 2012 கணக்குப்படி இது 12 கோடியாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த இன்டர்நெட் யூஸர்ஸ் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர். இதோ இந்தியாவின் இன்டர்நெட் யூஸர்ஸ் பற்றிய அறிக்கையின் தகவல்கள்.....இன்று உலகில் உள்ள அனைவருக்கும் தங்களது முக்கிய தேவையாத இன்டர்நெட் மாறியுள்ளது மேலும் உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் தொகையில் இந்தியா உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர்.

அதுவே 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டது. 2012 கணக்குப்படி இது 12 கோடியாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த இன்டர்நெட் யூஸர்ஸ் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர். இதோ இந்தியாவின் இன்டர்நெட் யூஸர்ஸ் பற்றிய அறிக்கையின் தகவல்கள்.....


விண்டோஸ் பற்றி சில தகவல்கள்...!

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் விண்டோஸ் பற்றி நாம் அறியாதது பல அவற்றை பற்றி நாம் சிறிது பார்ப்போமா நண்பரே. விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான்.

எந்த புரோகிராமையும், நாம் விரும்பும்போது, இணைக்கவும், நீக்கவுமான சுதந்திரத்தை விண்டோஸ் வழங்குகிறது. அத்துடன், விண்டோஸ் பிளாட்பாரத்தில் வைத்துள்ளவற்றை, நாம் விரும்பும் வகையில் இணைத்துச் செயல்படுத்தும் சக்தியையும் நமக்குத் தருகிறது.

இந்த வசதி, நமக்குச் சில குறைபாடுகளையும் தருகிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எண்ணிலடங்காத ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சாதனங்களைக் கையாள்கிறது.

ஒவ்வொரு சாதனத்திற்கும், அவை சார்ந்த தகவல்களைத் தேடி எடுத்து, தன்னிடத்தில் வைத்து இயக்குகிறது. இதோ விண்டோஸ் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள் இதோ கீழே ஸ்லைட் சோவில் காணுங்கள்....

பி.டி.எப். பைல் பற்றி சில தகவல்கள்!!!

நாம் இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில், குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும். இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது.

 மற்ற பிரவுசர்கள் இந்த கேள்வியைக் கேட்பதில்லை. குரோம் மட்டும் ஏன் கேட்கிறது? உண்மையிலேயே பி.டி.எப். பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுக்குமா? இதோ அதற்கான பதில்கள்.

முதலில் பி.டி.எப். பைல் என்பது, டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் கொண்ட ஒரு பைல் மட்டுமே. இது எப்படி கம்ப்யூட்டரைக் கெடுக்கும் அளவிற்கு அபாயத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

ஆனால், இந்தக் கேள்வி பொருளற்றது என, இதனைச் சற்று ஆய்வு செய்திடுகையில் தெரிகிறது. அதனை இங்கு காணலாம். கடந்த சில ஆண்டுகளாகவே, பி.டி.எப். பைல்களைப் படிக்க நாம் பயன்படுத்தும் அடோப் ரீடர் போன்ற புரோகிராம்கள், இணையத்தில் வைரஸ்கள் எளிதாகத் தாக்குவதற்கான நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், பி.டி.எப். பைல்கள் வெறும் டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் மட்டும் கொண்டதல்ல. ஸ்கிரிப்ட், பதிக்கப்பட்ட இமேஜ் மற்றும் சில கேள்விக்குரியவைகளும் இதில் அடங்கியுள்ளன. பி.டி.எப். பைல் வடிவத்தில் பல குழப்பமான படிமங்களில் விஷயங்கள் அடுக்கப்பட்டு கிடைக்கின்றன. 

இப்படி அடைக்கப்படும் பல விஷயங்கள், வைரஸ்களை அனுப்பும் ஹேக்கர்களுக்கு, விஷமத்தனமான செயல்பாடுகளை மேற்கொள்ள இடம் அளிக்கின்றன. இவற்றில் எவை ஹேக்கர்களுக்குச் சாதகமான சூழ்நிலையை அமைக்கின்றன என்று பார்க்கலாம். 

பி.டி.எப். பைல்களில் ஜாவா ஸ்கிரிப்ட் இடம் பெறலாம். இந்த மொழியைத்தான் வெப் பிரவுசர்களில் பயன்படுத்துகின்றனர். எனவே, அடோப் ரீடர் வழியாக, ஹேக்கர்கள் இதனைப் பயன்படுத்தி தங்கள் விஷமத்தன வேலைகளை மேற்கொள்கின்றனர். 

மேலும், அடோப் ரீடர், அடோப் தொகுப்பிற்கான ஸ்பெஷல் ஜாவா ஸ்கிரிப்டைப் பயன்படுத்துகிறது. இது பாதுகாப்பாற்றது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பி.டி.எப். பைல் செய்யும் வேலைகள் பதிக்கப்பட்ட ப்ளாஷ் பி.டி.எப். பைல்களில், பதிக்கப்பட்ட ப்ளாஷ் விஷயங்கள் இடம் பெறலாம். 

2012 ஏப்ரல் வரை, அடோப் அதனுடைய ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வந்தது. பொதுவாக ப்ளாஷ் பிளேயரில் காணப்படும் பிழைகள் அப்படியே இங்கும் இருப்பதால், ஹேக்கர்கள் இதனையும் பயன்படுத்துகின்றனர். 

தற்போது, பி.டி.எப். ரீடர்கள், பைலில் உள்ள ப்ளாஷ் பிளேயரைப் பயன்படுத்தாமல், கம்ப்யூட்டர்களில் உள்ள ப்ளாஷ் பிளேயரையே பயன்படுத்தி வருகின்றன.

விண்டோஸ் எக்ஸ்பியை முடிவுக்கு கொண்டு வருகிறுது மைக்கிரோசாப்ட்

மைக்கிரோசாப்ட் நிறுவனம் தனது பழைய ஓஎஸ் ஆன விண்டோஸ் XPக்கு செக்கியூரிட்டி அப்டேட்களை இனிமேல் வெளியிட போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு XP ஓஎஸ்யை பயன்படுத்துபவர்களுக்கு ஓரு கஷ்டமான விஷியாகும் அவர்கள் விரைவில் விண்டோஸ் 8 ஓஎஸ்க்கு மாற வேண்டிய நிலை உண்டாக்கியுள்ளது.


மைக்கிரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் XPக்கு செக்கியூரிட்டி அப்டேட்களை வெளியிடபோவதில்லை என்பதற்க்கான அர்த்தம் என்னவென்றால் இந்த ஓஎஸ்யை பயன்படுவதில் ஹாக்கர்கள் எதாவது குறையை கண்டுபிடித்தால் அதற்க்கு மைக்கிரோசாப்ட் நிறுவனம் பொறுப்பேற்காது என்பது தான்.

மைக்கிரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே தனது பல ஓஎஸ்களான வின்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் விஸ்டா ஆகிய வெர்ஷன்களுக்கு செக்கியூரிட்டி அப்டேட்களை வெளியிடுவதை நிறுத்தி இருந்தது இப்பொழுது அந்த வரிசையில் விண்டோஸ் XPயும் இணைய போகிறது.


இதுநாள் வரை விண்டோஸ் XP ஓஎஸ்யை பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள் இப்பொழுது வேறு ஒரு புதிய ஓஎஸ்க்கு ஏற்றபடி அவர்களது சிஸ்டம் மற்றும் அவர்களது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வெண்டும். இன்று வரும் பெரும்பாலான கம்பியூட்டர்களில் விண்டோஸ் 8 ஓஎஸ் தான் உள்ளது, விண்டோஸ் XPயை பயன்படுத்தியவர்களுக்கு இந்த புதிய ஓஎஸ்யை பயன்படுத்துவது கடினமாகத்தான் இருக்கும்.

இப்படிதாங்க லேப்டாப் வாங்கணும்...!

இன்று பள்ளி படிக்கும் மாணவர்கள் தொடங்கி காலேஜ், ஆபிஸ் என அனைத்திலும் தற்போது லேப்டாப் வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இன்று சந்தையில் ஏராளமான லேப்டாப்புகள் நமக்கு கிடைக்கின்றன ஆனால் அவற்றில் எது சிறந்தது என்று நாம் சற்று குழம்புவோம் ஏனென்றால் நாம் அதை மற்றவைகளுடன் அதை ஒப்பிட்டு பார்கையில் ஒன்றை விட ஒன்று பெட்டராக தான் தெரியும்.


நீங்கள் சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் இங்கு சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதை பாருங்கள் அதன் பிறகு நீங்கள் மிக எளிதாக நல்ல லேப்டாப்பை வாங்குவீர்கள் நண்பரே சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் நீங்களே பாருங்கள்....

கம்பியூட்டர இப்படிதான் மெயின்டேயின் பண்ணணும்


கம்பியூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் மனிதனின் மூன்றாவது கையாகவே மாறிவிட்டது எனலாம்.


மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வதை நாம் தினசரி சாலைகளில் பார்க்கலாம் நண்பரே.


இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


அப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம் இவை மிக எளிய வேலைகள் தான் ஆனால் பெரும்பாலானோர் இந்த வேலைகளை செய்வதில்லை அது என்ன வேலைகள் என்பதை பாருங்கள்.

தலைசிறந்த ஆன்ட்டி வைரஸ்கள் இதுதான்

இணையம் என்ற ஒன்று வந்தபிறகு அதில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதில் கெடுதலும் அதிகம் காணப்படுகின்றது.

அந்த நம் கம்பியூட்டரில் மிக எளிதாக வைரஸ் அல்லது மால்வேர் ப்ரோகிராம்கள் நுழைந்து விடுகின்றன இவை நமது கம்பியூட்டருக்கு அதிகம் கெடுதலைதான் உண்டாக்குகின்றது.

 அந்த வகையில் உங்கள் கம்பியூட்டருக்கு ஏற்ற ஆன்ட்டி வைரஸ் எது என்று உங்களுக்கு தெரியுமா இதோ இவைதான் உங்களது கம்பியூட்டருக்கு ஏற்ற ஆன்ட்டி வைரஸ் பாஸ்.

 இந்த ஆன்ட்டி வைரஸ் தொகுப்பினை நீங்கள் வைத்திருந்தால் உங்கள் கம்பியூட்டர் மிக பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம்...

கம்பியூட்டர் அட்மினின் முழு பவர் இதுதான்!

கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் வைத்திருக்கும் அனைவரிடமும் உங்களது கம்பியூட்டரில் அட்மின் என்ற ஒரு ஆப்ஷன் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் வரும்.


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொண்டுள்ளவர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ்டம் பைல்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.


அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை
அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்துபவர்களின் அமைப்பை பாதிக்கலாம். இந்த இரு வகை அக்கவுண்ட்கள், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதனால் தான், மற்றவர்கள், உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியாது. முக்கியமான பைல்களை அழிக்க முடியாது. இஷ்டத்திற்கு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முடியாது.


சிஸ்டம் அமைப்புகளை மாற்றக் கூடிய சில புரோகிராம்களை, எடுத்துக் காட்டாக ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல், நீங்கள் இயக்க முயற்சிக்கையில், முதலில் திரையில் தோன்றும் கட்டத்தில், இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் மாற்றங்கள் ஏற்படுத்துவதனை அனுமதிக்கிறீர்களா? என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்படும்.

புதுசு புதுசாக யோசிக்கும் ஹாக்கிங் திருடர்கள்!!!

டெல்லி போலீஸ் அதிகாரிகள் ஒரு அதிர்ச்சியான தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளனர். அதாவது திருடர்கள் இப்பொழுது ஹை டெக் முறையில் பேங் அக்கவுன்டை ஹாக் செய்து ஆன்லைனில் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்களாம்.


இது சம்பந்தபட்ட விசாரனையில் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நைஜீரீயா நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் வசிக்கும் ஜப்பானை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ. 70 லட்சத்தை திருடி உள்ளார்கள். இது பல போன்று பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த ஹை டெக் திருடர்கள் எவ்வாறு பணத்தை திருடுகின்றனர் என்ற தகவலை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்..

Monday, 25 November 2013

கம்பியூட்டர் ஹார்ட்வேர் பற்றி சில...

கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவருக்குமே ஏற்படும் பிரச்சனை என்னவென்றால் ஹார்ட்வேரில் ஏதாவது பிரச்சனை எற்படுவது தான் அந்த மாதிரி தருணங்களில் நாம் சற்று குழம்பி போய் தான் நிற்ப்போம்.

சாப்ட்வேர் அல்லது ஏதாவது வைரஸ் பிரச்சனை என்றால் நாம் மிக எளிதாக செயல்பட்டு முடித்து விடுவோம் ஆனால் ஹார்ட்வேர் சிறிது கஷ்டம் தான்.

மேலும் நமது கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம்.

இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன அவற்றை பாருங்கள் இனி உங்கள் கம்பியூட்டரில் ஹார்ட்வேர் பிரச்சனை ஏற்பட்டால் எளிதாக தீர்த்திடுங்கள்.....

இந்த கண்டுபிடிப்புக்கு ஒரு சபாஷ்!!!

தொழில்நுட்பம் அசூர வேகத்தில் வளர்ந்து வருகிறது. மக்களின் தேவைக்காக நிறைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. கைகளை விபத்திலோ அல்லது வேறு காரணத்திலோ இழந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் பெபியோனிக்3 (bebionic3) என்ற டெர்மினேட்டர் ஆர்ம்(terminator arm).

 இந்த என்ற டெர்மினேட்டர் ஆர்ம் நுண்ணிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கார்பன் பைபர் மையோஎலக்டிரக் கையான இது அலுமினியம் மற்றும் அலாய்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேல் அர்ம்ஸில் உள்ள அசைவுக்கு ஏற்ப இந்த கையும் இயங்கும்.

மனிதனின் அசைவுக்கு ஏற்ப இயங்கும் வகையில் இதில் 14 கிரிப்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள சென்ஸ்டிவிட்டி புரோகிராமபுள் ஆகும். இந்த கையில் மூலம் கீபோர்டை டச் செய்யலாம். முட்டையை லாவகமாக எடுக்கலாம் அந்த அளவிற்க்கு சென்ஸ்டிவிட்டி இதில் உள்ளது.

இதை கொண்டு கம்பியூட்டர் மவுஸை இயக்கலாம். இந்த டெர்மினேட்டர் கையை பற்றிய மேலும் சில தகவல்கள் , படங்கள் மற்றும் வீடியோவை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

கம்பியூட்டர் வார்த்தைகள் இப்படியிருந்தால்..

இன்றைய உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனால் தவிர்கக முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம் இனி கம்பியூட்டர் இல்லாமல் மனிதனால் இயங்கவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது.

இதோ இங்கு கம்பியூட்டருடன் நம் அன்றாட பயன்படுத்தும் வார்த்தைகளுடன் கலந்துள்ளோம் இதை பாருங்க.

 புரோகிராம் என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. இன்று கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு அப்ளிகேஷன் என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.

கர்சர் என்பது தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட். கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் இயங்கி பல பணிகளை மேற்கொள்ளும் ஒரு சாதனம்.

மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம். சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப்பட்ட பிறகு, வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.

பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம். அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். 

இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம். ஹார்ட் டிரைவ் என்றால் முன்பு வெகு தூரம் களைப்பு தரும் பிரயாணம். இன்று அனைவரும் பேனா, பென்சில் இல்லாமலே எழுதும் ஒரு கம்ப்யூட்டர் பலகை. 

லாக் ஆன் என்றால் அன்று எரியும் நெருப்பிற்கு இடும் விறகு. இன்று தங்கள் பணி தொடங்கிட அனைவரும் கம்ப்யூட்டரில் செய்திடும் முதல் செயலை இப்படித்தான் சொல்கிறோம். எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டரின் குழந்தைக்கான படுக்கை. 

கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம். 

எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப். காய்ச்சல் வந்தால் காரணம் வைரஸ். இன்று கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.

கம்பியூட்டர் மெமரி பற்றி உங்களுக்கு தெரியுமா?

இன்றைக்கு கம்பியூட்டர் வைத்திருக்கும் பலருக்கு அதனுள் பலவற்று நிச்சயம் தெரியாமல் தான் இருக்கும் தெரியாமல் இருப்பது தப்பில்லை தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் தவறு.

இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும்.

இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ரேண்டம் அக்சஸ் மற்றும் பல சொற்களை ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்துப் பயன்படுத்துகின்றனர். எனவே இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

விண்டோஸ் வேகமாக இயங்க வேண்டுமா?

நீங்கள் உங்களது கம்பியூட்டரில் விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான்.

தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம்.

இன்னும் இது போல நாம் தவறான பல வழிகளை மேற்கொள்கிறோமா என்று சிந்தனை செய்தால், பட்டியல் நீளும். அதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணி நாம் குழம்பி விடுவோம் நண்பரே.

இனி உங்களுக்கு கவலை வேண்டாம் விண்டோஸ் சிஸ்டம் ஸ்லோவாக வேலை செய்கிறது என்று இதோ அதன் இயக்கத்தை அதிகப்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ்கள் நண்பரே.....

இந்த கம்பியூட்டர் 15,000 லேப்டாப்புக்கு சமம்!!!

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசூர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களை முன்னிலை படுத்த விரும்புகின்றனர். இதன் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.

கம்பியூட்டர் இன்று இவ்வுலகை ஆட்டி படைக்கும் ஒரு கருவியாக விளங்குகிறது. அந்த அளவிற்க்கு அதன் பயன்கள் உள்ளன. சூப்பர் கம்பியூட்டர்களை ஒப்பிடும் போது நாம் பயன்படுத்தும் கம்பியூட்டர்கள் ஒரு சிறு துரும்பு தான்.

ஆஸ்திரேலியாவில் சென்ற மாதம் ஒரு சூப்பர் கம்பியூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது . ராய்ஜின் (Raaijin) என்ற பெயர் கொண்ட அந்த சூப்பர் கம்பியூட்டர் தான் உலகில் உள்ள 27வது சூப்பர் கம்பியூட்டர் ஆகும். Australian National University வெளியிட்ட இந்த சூப்பர் கம்பியூட்டர் பற்றிய தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

கம்பியூட்டரில் ஏற்படும் சில முக்கிய பிரச்சனைகள்!!!

நாம் கம்பியூட்டர் பயன்படுத்தும் போது பல சமயம் அப்படியே ஹாங் ஆகி நின்று விடும் அந்த சமயங்களில் நாம் கோபத்தின் உச்சிக்கே போய்விடுவோம்

உங்கள் கம்ப்யூட்டர் அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவதைப் போல இயக்கத்தினைக் அடிக்கடி காட்டும் உடனே பதற்றம் அடைய வேண்டாம். இந்த நிலை ஏற்படுவதற்கான பொதுவான பிரச்னை களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காண்போம்.

பொதுவாக, கம்ப்யூட்டர் இயக்கம் எந்த நேரமும் முன் அறிவிப்பின்றி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓர் உண்மை. எந்த நேரத்திலும் இது நிகழும் என்பதால், அதனை எந்த நேரத்திலும் நாம் எதிர்பார்க்கவும் வேண்டும்.

உங்கள் சிஸ்டத்தில் தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மற்றவர்கள் கூறுவது மிகவும் சகஜமாகிவிட்டது.

முதலில் வேகமாக இயங்கிய கம்ப்யூட்டர், இப்போது மிகவும் குறைவான வேகத்தில் இயங்குகிறது, அடிக்கடி நீல நிறத்தில் திரையில் எச்சரிக்கை செய்தி கிடைக்கிறது.

சிபியு கேபினிலிருந்து பிளாஸ்டிக் சற்று கருகியது போல வாசனை வருகிறது, சிறிய கிரைண்டர் ஓடுவது போல சத்தம் வருகிறது போன்ற பேச்சுக்கள் எல்லாம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் குறை கூறும் குற்றச்சாட்டுக்களே. இவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் அல்லது ஆய்வு செய்திடலாம் என்று பார்ப்போம்.

டி.வி.டி ஞாபகம் இருக்குங்களா?

இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும் ஒரு குட்டி டிவைஸ் தான் பென்டிரைவ் ஆகும் அது இல்லமால் யாரிடமும் கம்பியூட்டரோ லேப்டாப்போ இருக்க வாய்பில்லை எனலாம்.

 என்னதான் பென் டிரைவ்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், இன்னும் சிடி, டிவிடி பயன்பாடு முற்றிலும் மறையவில்லை. பல சாதனங்களில் நாம் சிடிக்களையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் பாதுகாப்பான பயன்பாட்டினை சிடிக்கள் தருகின்றன.

மேலும் இவற்றை எந்த வகையான டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கூடுதல் சிறப்பு.

 சிடிக்களைப் பொறுத்தவரை, அதில் டேட்டாக்களை எழுதுகையில்தான் அதிகக் கவனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

உங்களுடைய கம்ப்யூட்டரில் சிடி அல்லது டிவிடியில் பைல்களை எழுதுகையில் பிற புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால் அவற்றை நிறுத்துவது நல்லது. ஒரே நேரத்தில் பலவகை புரோகிராம்களை இயக்குவது தான் இன்றைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு என்றாலும் மல்ட்டி மீடியா அம்சங்கள் அதிகமாகக் கொண்ட இன்டர்நெட் தளங்களை பார்த்துக் கொண்டிருக்கையில் சிடி / டிவிடிக்களில் எழுதுவது பாதிக்கப்படலாம்.

எனவே இன்டர்நெட் தொடர்பினையே நிறுத்திவைப்பது நல்லது. அதே போல சிபியு பயன்பாட்டினைக் குறைத்திட உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களையும் நிறுத்தி வைப்பது நல்லது. இல்லை என்றால் நிச்சயமாக பபர் அன்டர் ரன் என்ற பிரச்னை சிடி எழுதும் பணியில் எதிர்கொள்ள நேரிடும். கூடுதல் இயக்கங்கள் சிடியில் எழுதுவதைத் தடுக்காது என்றாலும், பல சிக்கல்கள் ஏற்படுவதை நிறுத்தும்.

 நீங்கள் பயன்படுத்தும் பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பினைத் தந்துள்ள நிறுவனத்தின் இணைய தளம் சென்று அதில் புதியதாக ஏதேனும் டிரைவர்கள் போட்டிருந்தால் அவற்றை இறக்கிப் பதிந்து கொள்வது நல்லது.

சிடி / டிவிடிக்களில் பைல்களை எழுத வெவ்வேறு பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. விண்டோஸ் தொகுப்பில் ஒன்று இணைந்தே கிடைக்கிறது. இவை சிடிக்களிலும் கிடைக்கின்றன. இவற்றையும் அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது. எது உங்களுக்கு எளிதாகவும் உகந்ததாகவும் தோன்றுகிறதோ, அவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம்.

ஒரு சிடி / டிவிடியில் எழுத அது தாங்கிக் கொள்ளும் அதிகபட்ச வேகம் என்னவென்று அந்த சிடியில் இருக்கும். அதைக் காட்டிலும் சிறிது குறைவான வேகத்தில் பைல்களை எழுதவும். இவ்வாறு எழுதும் வகையில் உங்களின் பர்னிங் சாப்ட்வேர் அமைக்கப்படும் வசதியினைப் பெற்றிருக்க வேண்டும். 

உங்களுடைய பர்னிங் சாப்ட்வேரில் அன்டர் ரன் பாதுகாப்பு உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும். சிடி / டிவிடியில் தகவல் எழுதப்படுகையில் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். 

அப்படி இல்லாதபோது தான் இந்த அன்டர் ரன் பிரச்னை வரும். இதனைச் சமாளித்திடும் நிலையில் பர்னிங் சாப்ட்வேர் இருக்க வேண்டும். இல்லை என்றால் சிடி / டிவிடி கரப்ட் ஆகிவிடும்.

 பல பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளில் பைல்களை எழுதி முடித்த பின்னர் தகவல்கள் சரியாக எழுதப்பட்டுள்ளனவா என சோதித்து அறியும் டேட்டா வெரிபிகேஷன் என்னும் வழிமுறை தரப்பட்டிருக்கும். 

இதன் மூலம் எந்தவிதமான பிழைகளும் இல்லாமல் சிடி/டிவிடிக்கள் எழுதப்பட்டுள்ளனவா என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். 

இருப்பினும் இது 100% உறுதிதானா என்பதனை உறுதியாகக் கூற முடியாது. நாட்கள் செல்லச் செல்ல இவை பயனற்றுப் போக வாய்ப்புண்டு. எனவே பைல்களை பேக்கப் எடுப்பதாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி / டிவிடி காப்பிகள் எடுப்பது நல்லது. அல்லது வேறு ஹார்ட் டிஸ்க்குகளில் பதிந்து வைப்பதுவும் நல்லது. 

மொத்தமாக சிடி/டிவிடிக்களை சொற்ப விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவது அந்த நேரத்திற்கு காசை மிச்சம் பண்ணும். ஆனால் காசைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள தகவல்கள் அடங்கிய பைல்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே நல்ல நிறுவனங்களின் பெயர்களில் வரும் சிடி/டிவிடிக்களையே பயன்படுத்தவும்.

சிடியில் எழுதி முடித்த பின் ஐ.எஸ்.ஓ. பைல் குறித்து ஒரு கேள்வி கேட்கப்படும். நாம் இது என்ன அறியாமலேயே தவிர்த்துவிடுவோம். ஒரு சிடி / டிவிடியில் உள்ள அனைத்து பைல்களின் அடங்கலை ஒரு தோற்றமாகத் தரும் பைல் ஐ.எஸ்.ஓ. பைல் ஆகும். 

பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகள் இந்த பைல்களை நேரடியாக எடுத்துக் கொண்டு அப்படியே சிடி / டிவிடிக்களில் எழுதும் திறன் கொண்டவை.

 ஒரு சிடி /டிவிடி யில் உள்ள தகவல்களை இன்டர்நெட் வழியே தருவதற்கு இந்த வகை பைல்கள் ஏற்றவை. எடுத்துக்காட்டாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இந்த வகையிலேயே இன்டர்நெட் வழி தந்தது.

பைல்களைச் சுருக்குவதற்கு ZIP மற்றும் RAR போன்ற பைல்கள் இருந்தாலும் இவற்றை விரித்துப் பின்னர் தான் சிடி/டிவிடிக்களில் பதிய முடியும். ஆனால் ஐ.எஸ்.ஓ. பைல்களை பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளே விரித்துப் பதிந்து கொடுக்கும்.

லேப்டாப் வெப்பத்துக்கு தீர்வு!

இன்று மாணவர்கள் மற்றும் ஆபிஸ் சொல்வோர் என அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படுவது லேப்டாப் தான்.


சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.


தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.


நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.


ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு.
இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.

விண்டோஸ் 7ல் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்

இன்று மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஓ.எஸ் எது என்றால் அது விண்டோஸ் 7 தான் என்னதான் விண்டோஸ் 8 பல அட்வானன்ஸ் ஆப்ஷன்களை கொண்டிருந்தாலும் யூஸர் பிரண்ட்லியாக இருப்பது என்னவோ விண்டோஸ் 7 தான்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் இருக்கின்றன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால், மின்சக்தியை மிச்சப் படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டரி களில் பேட்டரிகள் கூடுதலான நாட்க ளுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

 கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate, மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.

இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப் படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

 ஸ்லீப் மோட் (Sleep mode):

இது ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக் கம், டிவிடியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், pause அழுத்தித் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்பாகும். கம்ப்யூட்டரின் அனைத்து இயக்கங் களும் நிறுத்தப்படும்.

இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கங்களும், திறந்திருக்கும் டாகுமெண்ட்களும் மெமரியில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில் இயக்கி விடலாம். அடிப்படையில் இது "Standby" செயல்பாட்டினைப் போன்றதாகும். குறை வான காலத்திற்குக் கம்ப்யூட்டர் செயல் பாட்டினை நிறுத்த வேண்டும் எனில் இதனை மேற்கொள்ளலாம்.


ஹைபர்னேட் (Hibernate):

இதனை மேற்கொள்கையில், திறந்திருக்கும் உங்களுடைய டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் சேவ்செய்யப்படுகின்றன. கம்ப்யூட்டர் "shut down" செய்யப்படுகிறது. 

இந்த ஹைபர்னேட் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் ஸீரோ மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. மீண்டும் இதற்கு மின்சக்தி அளிக்கப்படுகையில், அனைத்தும் விட்ட இடத்திலிருந்து இயக்க நிலைக்கு வருகின்றன. அதிக நேரம் பயன்படுத்தப் போவதில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டரை குறிப்பாக லேப்டாப்பினை இந்த நிலைக்கு மாற்றலாம். 

ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep): 

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இணைந் ததுவே ஹைப்ரிட் ஸ்லீப் ஆகும். இது பொதுவாக டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்கள் மட்டுமே பயன்படுத்தும் வசதி. இந்த நிலையை மேற்கொள்கையில், திறந்து பயன்படுத்தக் கொண்டிருக்கும் டாகு மெண்ட்களும், சார்ந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ஹார்ட் டிஸ்க் மற்றும் நினைவகத்தில் வைக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிகக் குறைந்த மின்சக்தியில் உறங்கிக் கொண்டிருக்கும். 

நீங்கள் மீண்டும் வேலையைத் தொடங்க எண்ணி இயக்கியவுடன் மிக வேகமாக இவை பயன்பாட்டிற்குக் கிடைக்கும். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களில் இது மாறா நிலையில் இயங்கும்படி வைக்கப் பட்டுள்ளது. லேப்டாப்பில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை எப்போது ஸ்லீப் மோடில் போட்டாலும், அது உடனே ஹைப்ரிட் ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும். 

ஹைப்ரிட் ஸ்லீப் மோட், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கு ஏற்றதாகும். மின்சக்தி கிடைக்கும்போது, விண்டோஸ் இயக்கம் மெமரியை விரைவாக அணுக இயல வில்லை என்றால், உடனே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து பைல்களையும், அப்ளி கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளும்.

அழகிய பேன்டஸி வால்பேப்பர்கள் இலவசம்!!!

இன்று கம்பியூட்டர்களின் பயன்பாடு மக்களிடையே மிகவும் அதிகரித்துவிட்டது. கம்பியூட்டர் அல்லது லேப்டாப்புகள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவைகளின் பயன்கள் அதிகரித்துவிட்டன. இன்றைய மக்களிடம் கம்பியூட்டரில் எவ்வளவு பயன்கள் உள்ளன என்ற விழிப்பிணர்வு உள்ளன.

 ஒரு சிலர் வீட்டில் இரண்டு மூன்று கம்பியூட்டர்கள் கூட வைத்திருப்பார்கள், ஒரு சிலர் கம்பியூட்டரே உலகம் என்று இருப்பார்கள். கம்பியூட்டரில் அழகான படங்களை வால்பேப்பராக வைப்பது ஒரு சிலருக்கு மிகவும் பிடித்த விஷியமாகும் இருக்கும்.

தங்களது லேப்டாப் அல்லது கம்பியூட்டர்களுக்கு ஒவ்வொரு நாளும் புது புது வால்பேப்பரை வைத்து அழகு பார்பவர்களும் உண்டு. இங்கு சில ஹச்டி பேன்டஸி வால்பேப்பர்கள் உள்ளன. கீழே சிலைட்சோவில் உள்ள லிங்கின் மூலம் புது வகையான பேன்டஸி வால்பேப்ர்களை இலவசமாக டவுன்லோடு செய்யுங்கள்

டி.வியுடன் கம்பியூட்டரை இணைப்பது எப்படி?

இன்றைய காலத்தில் தொழில் நுட்பம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது எனலாம், மேலும் தினந்தோறும் அதில் பல மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருகிகுறது.

 இன்றைக்கு டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது.

இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.

கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம்.

இதன் மூலம் நீங்களும் உங்கள் டி.வியை கம்பியூட்டருடன் இணைத்து கண்டு மகிழுங்கள்....

இந்த பழக்கத்த கொஞ்சம் மாத்துங்க...!

இன்று கம்பியூட்டர் ஆனது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம் நண்பரே, கம்பியூட்டரை தினசரி மணிக்கணக்கில் பயன்படுத்தும் நாம் அதை ஏனே முறையாக பயன்படுத்த மறக்கிறோம். 

மேலும், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். 

நாம் கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல்வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும். இதை மேலும் நிறைய கூடாத பழக்கங்கள் நமக்கு இருக்கின்றன இதோ அவற்றை பற்றி நாம் பார்ப்போம்....

பயர்பாக்ஸ் குக்கீஸ் பற்றி சில....

நாம் அதிகம் பயன்படுத்தும் பிரவுசரான பயர்பாக்ஸில் உள்ள குக்கீஸ் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு முழுதாக தெரியும்?

 ஒரு பிரவுசர் புரோகிராமினைப் பயன்படுத்துபவரின் விருப்பங்களையும் தேர்வுகளையும் அறிந்து கொள்ள, பிரவுசர் கம்ப்யூட்டரில் உருவாக்கி வைத்திடும் பைல்களே குக்கீ பைல்கள்.

பாஸ்வேர்ட் அறிந்து கொள்ளுதல், விருப்பமான தளங்களைப் புரிந்து கொள்ளுதல் போன்ற பயனாளரின் விருப்பங்களை, இந்த குக்கீ பைல்கள் பதிந்து வைத்துக் கொண்டு, இணைய உலாவினை எளிதாகவும், சிக்கலின்றியும், விரைவாகவும் இயக்குகின்றன.

பொதுவாக வே, பிரவுசர்கள் அனைத்துமே, குக்கீ பைல்களை உருவாக்கிப் பதிப்பதனை மாறா நிலையில் தாங்களாகவே இயக்கி செயல்படுத்தும் வகையில் வைக்கின்றன. இருப்பினும், பயனாளர் எண்ணினால், அவற்றை இயங்காமலும், இயங்கும் நிலையிலும் வைக்கலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் இவற்றை எப்படிக் கையாளலாம் எனப் பார்க்கலாம்.

டூல்ஸ் (Tools) மெனுவில், ஆப்ஷன்ஸ் (Options) பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், Privacy என்ற டேப்பினை இயக்கவும். இதில் History என்ற பிரிவில் Use custom settings for history என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். குக்கீ பைல்களை முழுமையாக இயங்கா நிலையில் வைத்திட, Accept cookies from sites என்ற இடத்தில் இருக்கும் டிக் அடை யாளத்தை எடுத்துவிடவும்.

 இதன் மூலம் தர்ட் பார்ட்டி குக்கீ பைல்களையும் எடுத்துவிட முடியும். அல்லது குக்கீ பைல்களை, அவை உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாள்கள் வரை இருக்கட்டும் என எண்ணினால், Keep until என்ற கீழ் விரி மெனுவில் எத்தனை நாட்கள் அவை இருந்து இயங்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். அல்லது, ஒவ்வொரு முறை குக்கீகள் உருவாக்கப் படுகையில், அவற்றை வைத்துக் கொள்ளவா ? வேண்டாமா? என்ற ஆப்ஷன் உங்களிடம் கேட்கப் பட வேண்டும் எனில், ask me every time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 

ஆனால், இதனைத் தேர்ந்தெடுத்தால், அடிக்கடி இந்த ஆப்ஷன் நம்மிடம் கேட்கப்படும். பின்னர், அதனைக் கண்டு எரிச்சல் படக் கூடாது.

 இவை குறித்த கூடுதலான கட்டுப்பாடு வைத்துக் கொள்ள, அல்லது குக்கீகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள என்ற Show Cookies பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் குக்கீகள் அனைத்தையும், அல்லது சிலவற்றை நீக்கலாம், இயக்கலாம், முடக்கலாம் அல்லது கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

பரவும் புது வைரஸ்! கொஞ்சம் உஷாருங்க

இன்று உலகின் எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் ஒரு எதிர் விஷயம் கண்டிப்பாக இருக்கும் அந்த நாம் எவ்வளவு முன்னேச்சரிக்கையாக கம்பியூட்டரில் ஆன்ட்டி வைரஸ் போட்டு வைத்தாலும் வைரஸ் வருவது என்பதை நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

 வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இது முன்பு வந்த ‘Win32/Ramnit' என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் தான் நுழைந்த கம்ப்யூட்டர்களில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து, அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது.

 பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை.

கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது. இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 7 சில தகவல்கள்...

தற்போதும் அதிக யூஸர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஓ.எஸ் எது என்றால் அது விண்டோஸ் 7 என்றே கூறலாம்.

மேலும், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம்.

 நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.

அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை.

விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க ‘chr', iTunes இயக்க ‘it') என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.

கம்ப்யூட்டர் கீபோர்ட் ஷாட்கட் கீகள்!!!

கம்ப்யூட்டர், இன்று உலகத்தையே இயக்கும் ஒரு கருவி என்று சொன்னாலும் மிகை ஆகாது ஏனென்றால் அந்த அளவிற்க்கு கம்ப்யூட்டரின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது. பள்ளிக்கு செல்லும் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் கம்ப்யூட்டரின் தேவை உள்ளது.

 நாம் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் பொழுது பெரும்பாலும் மவுஸை வைத்து தான் பயன்படுத்துவோம் ஆனால் மவுஸ் இல்லாமல் கம்ப்யூட்டரில் பல வேலைகளை கீபோர்டின் மூலமே செய்யலாம் அதற்க்கு நீங்கள் சில ஷாட்கட் கீகளை தெரிந்து வைத்திருந்தால் போதும்.

 ஒரு சில ஷாட்கட் கீகளை தெரிந்து வைத்துக்கொண்டு நிறைய பேர் கம்ப்யூட்டரையே அவர்கள் தான் கண்டுபிடித்தது போல சீன் போடுவார்கள். இனிமேல் அது போன்ற சீன்களுக்கு நாம் இடம் கொடுக்க வேண்டாம். கீழே உள்ள சிலைட்சோவில் கீபோர்ட் ஷாட்கட் கீகள் உள்ளன அதை அறிந்து பயனடையுங்கள்.


புளுடூத் சில டிப்ஸ்...

முன்பெல்லாம் வயர்கள் மூலம்தான் அனைத்து இணைப்பும் ஆனால் இப்போதோ புளுடூத் வந்து அசத்திகொண்டிருக்கிறது.

 நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

 புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.

 ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை.

 இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.

 இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை.

இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்: அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன.

 மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம். 

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனை யும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும்.

 கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். 

இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம். 
புளுடூத் செக்யூரிட்டி:

 எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். 

ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும். உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது.

 ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை "bluejacking," "bluebugging" மற்றும் "Car Whisperer" என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

அழகிய பறவைகளின் வால்பேப்பர்கள் இலவசம்!!!

இன்று கம்பியூட்டர்களின் பயன்பாடு மக்களிடையே மிகவும் அதிகரித்துவிட்டது. கம்பியூட்டர் அல்லது லேப்டாப்புகள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவைகளின் பயன்கள் அதிகரித்துவிட்டன. இன்றைய மக்களிடம் கம்பியூட்டரில் எவ்வளவு பயன்கள் உள்ளன என்ற விழிப்பிணர்வு உள்ளன.

ஒரு சிலர் வீட்டில் இரண்டு மூன்று கம்பியூட்டர்கள் கூட வைத்திருப்பார்கள், ஒரு சிலர் கம்பியூட்டரே உலகம் என்று இருப்பார்கள். கம்பியூட்டரில் அழகான படங்களை வால்பேப்பராக வைப்பது ஒரு சிலருக்கு மிகவும் பிடித்த விஷியமாகும் இருக்கும்.

தங்களது லேப்டாப் அல்லது கம்பியூட்டர்களுக்கு ஒவ்வொரு நாளும் புது புது வால்பேப்பரை வைத்து அழகு பார்பவர்களும் உண்டு. இங்கு சில ஹச்டி அழகிய பறவைகளின் வால்பேப்பர்கள் உள்ளன. கீழே சிலைட்சோவில் உள்ள லிங்கின் மூலம் புது வகையான அழகிய பறவைகளின் வால்பேப்பர்களை இலவசமாக டவுன்லோடு செய்யுங்கள்.


பைல்கள் பற்றி நீங்கள் அறியாதவை..

இன்று நாம் தகவல்கள் மற்றும் கோப்புகளை சேமித்து வைக்க உதவுவது தான் பைல்கள். அந்த பைல்களில் பல வகை உள்ளன இதோ அவற்றை பற்றி கொஞ்சம் பார்ப்போமா..

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.

.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.

 ***.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.

 ***.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.

 .ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். .pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர்.

பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம் கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது


*******htm / html: ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.

 .csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப் பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.

 சுருக்கப்பட்ட பைல்கள்: கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

 இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 .zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும். 

******.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். Win Rar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.

 .cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

மவுஸ் பற்றி சில தகவல்கள்!!!

இன்று தினமும் நமது கைக்குள் சுத்தும் சக்கரம் எது என்று கேட்டால் அது மவுஸில் உள்ள Scroll வீல் தான்.

அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன.

நாம், இந்த வசதிகளை முழுமையாக அறியாமல், சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்துகிறோம். இங்கு மவுஸ் பயன்படுத்தி, நாம் ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கலாம். இதன் மூலம் நாம் நம்முடைய வேலைப் பயன்களைப் பல மடங்காக்கலாம்.

ஷிப்ட் கீ + மவுஸ் கிளிக்:

அனைத்து டெக்ஸ்ட் எடிட்டர்கள் மற்றும் புரோகிராம்கள், அனைத்து டெக்ஸ்ட் அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் பகுதியினை ஷிப்ட் கீ மற்றும் மவுஸ் இணைத்துப் பயன்படுத்தி ஹைலைட் செய்வதனை அனுமதிக்கின்றன.

எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் ஒன்றின் பாரா தொடக்கத்தில், கர்சரைக் கொண்டு சென்று, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, பாராவின் இறுதி நிலையில், கிளிக் செய்தால், பாரா முழுவதும் ஹை லைட் செய்யப்படும்.

இதில் இன்னொரு வழியும் உள்ளது. டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றில், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால், டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டின் பாரா, நெட்டு பத்தியாக இருந்தால், இந்த கீ செயல்பாடு பயன் தரும்.

கம்பியூட்டரில் இந்தமாதிரி யோசிப்பிங்களா?

இன்று கம்பியூட்டரில் நமக்கு தினசரி பல வார்த்தைகள் பயன்படும் அவற்றை நாமூம் பயன்படுத்தி கொண்டிருப்போம்.

 புரோகிராம் என்பது ஒரு டெலிவிஷன் ஷோ. இன்று கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு கட்டளைத் தொகுப்பு அப்ளிகேஷன் என்பது வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.

 விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.

கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட். கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் இயங்கி பல பணிகளை மேற்கொள்ளும் ஒரு சாதனம். மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம். சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப்பட்ட பிறகு, வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.

பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம். அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள்.

இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம். ஹார்ட் டிரைவ் என்றால் முன்பு வெகு தூரம் களைப்பு தரும் பிரயாணம். இன்று அனைவரும் பேனா, பென்சில் இல்லாமலே எழுதும் ஒரு கம்ப்யூட்டர் பலகை.

லாக் ஆன் என்றால் அன்று எரியும் நெருப்பிற்கு இடும் விறகு. இன்று தங்கள் பணி தொடங்கிட அனைவரும் கம்ப்யூட்டரில் செய்திடும் முதல் செயலை இப்படித்தான் சொல்கிறோம். எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டரின் குழந்தைக்கான படுக்கை.

கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம்.

 எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப். காய்ச்சல் வந்தால் காரணம் வைரஸ். இன்று கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.

புக்மார்க் அழிச்சுட்டிங்களா நோ பிராப்ளம்..

நாம் இன்டர்நெட்டில் உலவும் போது நமக்கு பெரிதும் உதவுவது புக்மார்க் என்ற ஒரு ஆப்ஷன்.

இன்டர்நெட் உலாவில் புக்மார்க்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாம் அடிக்கடி செல்ல விரும்பும், முக்கிய தளம் எனக் கருதும் தளங்களுக்கான முகவரிகளைக் குறித்து வைப்பதே புக்மார்க்.

ஒவ்வொரு முறையும், தள முகவரியினை டைப் செய்திடாமல், இந்த புக்மார்க்குகளில் கிளிக் செய்து தளத்தினைப் பெறலாம். இவ்வளவு முக்கிய புக்மார்க்குகளைத் தவறுதலாக அழித்துவிட்டால் என்ன செய்வது? திரும்பப் பெறும் வழிகள் எவை? இங்கு பார்க்கலாம்.

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் அழிக்கப்பட்ட, நீக்கப்பட்ட, புக்மார்க்குகளைத் திரும்பப்பெறும் வழிகள் தரப்பட்டுள்ளன. குரோம் பிரவுசரில் இது சற்று கடினமான வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

புக்மார்க்குகளுக்கான பேக் அப் பைல் சிறிய, மறைத்துவைக்கப்பட்ட பைலாக குரோம் பிரவுசரில் உள்ளது. இதனை நாமாகத்தான் தேடிக் கொண்டு வர வேண்டும். இந்த பைல் அடிக்கடி இதன் மேலாகவே எழுதப்படுகிறது.

பயர்பாக்ஸ் பிரவுசரில் இது மிக எளிது. பயர்பாக்ஸ் புக்மார்க் மேனேஜர் பிரிவில், அழிக்கப்பட்ட புக்மார்க்கினை உடனடியாக மீட்க ஒரு "undo" வசதி தரப்பட்டுள்ளது. பிரவுசரும் தானாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் புக்மார்க்குகளை பேக் அப் செய்கிறது.

இந்த பேக் அப் பைலைப் பல நாட்கள் பயர்பாக்ஸ் வைத்துக் காக்கிறது. இதனை எப்போது வேண்டுமானாலும், நாம் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். மறைக்கப் பட்ட போல்டர்களைத் தேடி அலைந்து தோண்டி எடுக்கும் வேலை எல்லாம் இதில் இல்லை.

குரோம் பிரவுசரின் புக்மார்க் மேனேஜரில் "undo" ஆப்ஷன் இல்லை . ஏதாவது முறையில் ஏடாகூடமாக, உங்கள் விரல் நழுவி புக்மார்க்குகள் உள்ள போல்டரை அழித்து விட்டால், அவற்றை மீட்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

இதில் உள்ள export ஆப்ஷனைப் பயன்படுத்தி ஏற்கனவே இதன் பேக் அப்பினை நீங்கள் தயாரித்து வைத்திருந்தால், அவற்றை import செய்து
மீண்டும் பெறலாம். ஆனால் இந்த பேக் அப்பிற்குப் பின்னால் ஏற்படுத்திய புக்மார்க்குகள் கிடைக்காது.

குரோம் பிரவுசர் உங்கள் புக்மார்க் பைலினை ஒரே ஒரு பேக் அப் பைலாக பராமரிக்கிறது. ஒவ்வொரு முறை குரோம் பிரவுசரை இயக்கும் போதும் அது, அந்த பேக் அப் பைலை மீண்டும் எழுதிக் கொள்கிறது. எனவே புக்மார்க் பைல் உள்ள போல்டரை அழித்துவிட்டால், குரோம் பிரவுசரை மூடக் கூடாது. மீண்டும் இயக்கக் கூடாது. அப்படி இயக்கினால், பேக் அப் பைலில், புக்மார்க்குகள் அழிக்கப்பட்ட நிலையில் எதுவும் திரும்பக் கிடைக்காது. அப்படியானால் என்ன செய்யலாம்? இங்கு பார்க்கலாம்.

 விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்கவும். அதன் அட்ரஸ் பாரில் கீழ்க்காணும் முகவரியை டைப் செய்திடவும். இதில் NAME என்ற இடத்தில், உங்களின் விண்டோஸ் யூசர் அக்கவுண்ட் பெயரை எழுதவும்.

C:\Users\NAME\AppData\Local\Google\Chrome\User Data\Default இந்த போல்டரில் இரண்டு புக்மார்க் பைல் இருக்கும். அவை Bookmarks and Bookmarks.bak. இதில் இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது (Bookmarks.bak) அண்மைக் காலத்திய பேக் அப் பைல். நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்த போது, பிரவுசரால் உருவாக்கப்பட்ட பேக் அப் பைல்.

இந்த போல்டரில் .bak என்ற எக்ஸ்டன்ஷன் பெயருடன் எந்த பைலும் இல்லாமல், Bookmarks என்ற பெயரில் இரண்டு பைல்கள் இருந்தால், பைல்களுக்கான துணைப் பெயர் மறைக்கப்படும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது என்று பொருள். இந்தக் குழப்பத்தினை நீக்க, Organize மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் "Folder and search options." என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். போல்டர் ஆப்ஷன்ஸ் விண்டோவில், View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Hide extensions for known file types" என்ற வரியில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்து விடவும்.

இப்போது, மேலே கூறப்பட்ட இரண்டு புக்மார்க் பைல்களில், இறுதியாக உருவாக்கப்பட்ட பேக் அப் பைல், அதற்கான எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும். இந்த பேக் அப் பைலை மீட்டுக் கொண்டு வர, குரோம் பிரவுசரின் அனைத்து விண்டோக்களையும் மூடவும். குரோம் பிரவுசர் மூடப்பட்ட நிலையில், Bookmarks பைலை அழிக்கவும்.

 Bookmarks.bak என்ற பைலை Bookmarks என பெயர் மாற்றம் செய்திடவும். இனி மீண்டும் குரோம் பிரவுசரை இயக்கி னால், நீங்கள் அழித்த புக்மார்க் பைலைக் காணலாம். நீங்கள் இறுதியாக குரோம் பிரவுசரைத் திறந்து இயக்கியபோது உருவாக்கிய புக்மார்க்குகள் மட்டும் அங்கு கிடைக்காது.

விண்டோஸ் எக்ஸ்பி!!! தூக்கிடுங்க பாஸ்.

இன்றும் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தான் விண்டோஸ் எக்ஸ்பி நண்பரே.

மேலும் 2014 ம் ஆண்டுடன் விண்டோஸ் எக்ஸ்பி முற்றிலுமாக புறக்கணிக்கப்படும் என்று மைக்ரோசாப்ட் ஏற்கனவே அறிவித்திருந்ததை நாம் அறிவோம்.

அண்மையில் இது குறித்து, கண்காணித்து ஆய்வு செய்திடும், நெட் அப்ளிகேஷன்ஸ் (Net Applications) அமைப்பு தரும் தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.

 சென்ற ஆகஸ்ட் மாதத்தில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு, மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில் 33.7 சதவீதமாகக் குறைந்தது. ஒரே மாதத்தில் 3.5 சதவீதம் குறைந்தது இதுவே முதல் முறையாகும். ஜூலையில் மொத்த விண்டோஸ் சிஸ்டம் பயன்பாடு 40.6 சதவீதமாக இருந்தது.

 எக்ஸ்பியின் இடத்தில், கடந்த ஓராண்டாக இயங்கி வரும் விண்டோஸ் 8 மற்றும் நான்கு ஆண்டுகளாகச் சந்தையில் இயங்கும் விண்டோஸ் 7 ஆகியவை இடம் பிடித்துள்ளன. சென்ற மாதத்தில், விண்டோஸ் 7, மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களில், 50 சதவீத இடத்தையும், விண்டோஸ் 8, 8.4 சதவீத இடத்தையும் பிடித்தன.

ம்ம்ம்ம்... எங்கயோ தப்பு நடந்திருக்கு..

இன்றைய உலகில் ஒரு செயல் மனிதனால் முடிகிறதோ இல்லையோ நிச்சயம் கம்பியூட்டரால் அனைத்து செயல்களும் முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

அந்த அளவுக்கு கம்பியூட்டர் துறையில் இந்த உலகம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது எனலாம்.

அதற்கேற்ப முன்பெல்லாம் விலங்குகள் அல்லது பறவைகளின் போட்டோக்களை எடுத்தால் அதை போட்டோஷாப் போன்றவற்றில் போட்டு மாற்றம் செய்து அவற்றை வெளியிடுவர்.

ஆனால் தற்போதோ கம்பியூட்டரிலேயே படங்களை வரையும் முறை வந்துவிட்டது இதன் மூலம் நமக்கு பிடித்த விலங்களின் படங்களை நாமே வரைந்து கொள்ளலாம்.

அதன்படி இங்கு சில விலங்குகளின் படங்கள் உள்ளன இவற்றை பாருங்கள் இவை கம்பியூட்டரில் கற்பனையாக வரையப்பட்ட படங்கள் ஆகும்...

பாஸ்வேர்டுனா இப்படி இருக்கணும்..

இன்று நாம் பயன்படுத்தும் கம்பியூட்டர் தொடங்கி மொபைல் வரை அனைத்துமே ஒரே பாஸ்வேர்டு மயம் எனலாம்

ஆனால் சில சமயங்களில் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல் இருந்து,. அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.

அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.

தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.

இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.


பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம். 

பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.

 பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.

மெயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புக்கள்..


இன்று இணையதளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் நிச்சயம் ஒரு மெயில் அக்கவுன்ட் இருக்கும் எனலாம் அதில் அடிக்கடி வைரஸ் தாக்குவதும் இப்போது நமக்கு வாடிக்கையாகிவிட்டது.

மேலும், ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறைகளாகவே இருந்து வருகின்றன.

எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் மட்டும் இப்போது சரி வராது.

மேலும் பல புதிய வழிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்திய தூண்டுதல் வழி முறைகளை ஆய்வு செய்து சில வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

இன்டர்நெட்டில் இதெல்லாம் பண்ணறிங்களா?


இன்று எத்தனையோ வைரஸ்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது அலைகள் மிக எளிதாக உங்கள் கம்பியூட்டரில் நுழைந்து உங்கள் கம்பியூட்டரை பதம் பார்த்து விடும்.

மேலும், நம் இணைய தள அக்கவுண்ட்களில் எவ்வளவு தான் சிக்கலான பாஸ்வேர்ட்களை நாம் மேற்கொண்டிருந்தாலும், இது போன்ற புரோகிராம்கள் அவற்றைக் கைப்பற்றி, நம் தனிநபர் தகவல்கள் மற்றும் டேட்டா பைல்களைப் பிறர் கைப்பற்றி வருகின்றனர்.

எனவே பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்குவதிலும், இணைய தள அக்கவுண்ட்களைக் கையாள்வதிலும் நாம் குறைந்த பட்ச அளவிலாவது பாதுகாப்பு வழிகளைக் கையாள வேண்டியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

சில பாஸ்வேர்ட் மேனேஜர் புரோகிராம்கள், மிக வலுவான, தனிப்பட்ட பாஸ்வேர்ட்களை, ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தள அக்கவுண்ட்களுக்கு உருவாக்கி வழங்குகின்றன. இதனால், நாம் இந்த வகையான பாஸ்வேர்ட்களை, திரும்பப் பயன்படுத்த வழி கிடைக்கிறது.

மேலும் இவை வெப் பிரவுசர்களுடன் இணைந்து இயங்குவதால், இணையதள லாக் இன் படிவங்களில் தேவையானவற்றைத் தாங்களாகவே பூர்த்தி செய்து, அவற்றை சேவ் செய்தும் வைக்கின்றன. இதன் மூலம் நாம் பாதுகாப்பாக இயங்க முடிகிறது. இவற்றில் சிறப்பானவையாக Last Pass, Kee Pass மற்றும் 1Password ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

நாம் அனைவருமே ஜிமெயில் அக்கவுண்ட் பயன்படுத்துகிறோம். இன்னொரு இணைய தள அக்கவுண்ட்டில் பயன்படுத்தும் பாஸ்வேர்டினையே இதற்கும் பயன்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

பாஸ்வேர்டு பற்றி சில முக்கிய தகவல்கள்..!


இன்று நாம் அனைவரும் வேகமாக சென்று கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை எனும் வண்டியில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

 மேலும்,நமது மனித வாழ்கையிஸ் ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய மொத்த வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்றால் அது மிகையாகாது.

நாம் ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரிய தாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான்.

உங்களது வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

 இதோ உங்கள் பாஸ்வேர்டின் வலிமையை அறிய நீங்கள் அறிய வேண்டுமா....

Saturday, 23 November 2013

ஓ.எஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை..

இன்று நம் அனைவராலும் பயன்படுத்தும் ஓ.எஸ் எது என்று கேட்டால் அது விண்டோஸ் தான்.

மேலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம்.

ஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம்.

எடுத்துக் காட்டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், அச்சிடுவதனை அபார்ட் செய்திட, புரோகிராமே வழி கொடுக்கிறது. எதனையேனும் தேடச் சொல்லி, கட்டளை கொடுத்து, கம்ப்யூட்டர் தேடி, முடிவுகளைப் பட்டியலிடுகையில், நமக்குத் தேவையான தகவல் கிடைத்தால், செயல்பாட்டினை அபார்ட் செய்திட வழி கிடைக்கிறது. இதனை crash என்பதனுடன் ஒப்பிடலாம். கிராஷ் ஏற்படுகையில், சிஸ்டம் முழுமையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட, முடங்கிப் போய் நின்று விடுகிறது.

வரிசையாக அல்லது குழுவாக அமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு. இந்த கட்டளைகளை அப்படியே மொத்தமாக, இவை உள்ள பைலை இயக்கிச் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, டாஸ் அடிப்படையில் இயங்கும் சிஸ்டத்தில், சிஸ்டம் தானாக, AUTOEXEC.BAT என்ற பைலை இயக்கும். இதில் டாஸ் இயக்கம் தொடக்கத்தில் இயங்குவதற்குத் தேவையான கட்டளைகள் இருக்கும். சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், பேட்ச் பைல் என்பதற்குப் பதிலாக command file அல்லது shell script எனப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமில், கீ போர்டு, டிஸ்பிளே ஸ்கிரீன், டிஸ்க் ட்ரைவ்கள், சீரியல் தொடர்புகள் மற்றும் இது போன்ற பல சில்லரை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த புரோகிராமில் கட்டளைகள் இருக்கும்.

இந்த பயாஸ் புரோகிராம் ஒரு சிப்பில் பதிந்து தரப்பட்டிருக்கும். இதனால், டிஸ்க் ட்ரைவ் கெட்டுப் போனாலும், கம்ப்யூட்டருக்கு இந்த தொடக்க நிலை புரோகிராம் கிடைக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஒன்று, தானாக இயங்க வழி கிடைக்கிறது. மெமரி சிப்பைக் காட்டிலும், RAM வேகமாக இயங்கும் என்பதால், பல கம்ப்யூட்டர்களில், பயாஸ் ROMலிருந்து RAMக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கும்படி அமைக்கப்படும். இதனை ஆங்கிலத்தில் shadowing என அழைக்கிறோம்.

 இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் flash BIOS என அமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. அதாவது பயாஸ் புரோகிராம் பிளாஷ் மெமரியில் பதியப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், தேவைப்படுகையில், இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். பொதுவாக BIOS என்பது அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுவான வரைமுறையுடன் அமைக்கப்படுகிறது.

BIOS புரோகிராமில் பல வகையான பதிப்புகள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக ஏதேனும் டாஸ் கட்டளைகள் தரப்பட வேண்டும் என்றால், அவை சாப்ட்வேர் மூலம் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனங்களைக் கையாளும் புரோகிராம்களை PnP BIOS அல்லது PnPaware BIOS என அழைக்கின்றனர்.

இன்டர்நெட் விட்டு விட்டு வருதா உங்களுக்கு?

இன்றைய காலகட்டத்தில் இணைய இணைப்பு மிக அத்தியாவசிய தேவையாகிவிட்டது மக்களுக்கு எனலாம் நாம் இணையம் பயன்படுத்தும் ஏற்படும் பெரும் பிரச்சனை ஒன்று உள்ளது.

அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை இதுதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது.

இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும் மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது.

பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து பார்க்கிறோம். நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம்.

கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங்களை செய்து பார்த்திருக்கிறிர்களா நண்பரே இதை பாருங்கள் இதுதான் உங்களது இணைப்பு தீடீரென்று தடைபடுவதற்கு காரணம் நண்பரே இதை ஒரு முறை செக் செய்து பாருங்கள்....

வைரஸ் தாக்கிவிட்டதா பென்டிரைவை?


இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருப்பது பென்டிரைவ் என்ற ஒரு பொருள் தான் தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது பென்டிரைவ்கள்.

இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவைஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.

ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது.

பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போமா நண்பரே இதோ அந்த தகவல் உங்களுக்காக...

லேப்டாப் வாங்கும் போது இதை செக் பண்ணிங்களா?


இன்று பள்ளி படிக்கும் மாணவர்கள் தொடங்கி காலேஜ், ஆபிஸ் என அனைத்திலும் தற்போது லேப்டாப் வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இன்று சந்தையில் ஏராளமான லேப்டாப்புகள் நமக்கு கிடைக்கின்றன ஆனால் அவற்றில் எது சிறந்தது என்று நாம் சற்று குழம்புவோம் ஏனென்றால் நாம் அதை மற்றவைகளுடன் அதை ஒப்பிட்டு பார்கையில் ஒன்றை விட ஒன்று பெட்டராக தான் தெரியும்.


நீங்கள் சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் இங்கு சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன அதை பாருங்கள் அதன் பிறகு நீங்கள் மிக எளிதாக நல்ல லேப்டாப்பை வாங்குவீர்கள் நண்பரே.


சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் நீங்களே பாருங்கள்...

பேட் செக்டார் பற்றி தெரிஞ்சுக்குங்க...

புதிய கம்பியூட்டரில் ஹார்ட் டிஸ்க் பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா எதுவும் எழுதப்பட மாட்டாது.

இதனை விண்டோஸ் சிஸ்டமே அறிந்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொள்ளும். இதற்கான காரணம் என்ன? எதனால் இவ்வாறு ஏற்படுகிறது? இவை ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

ஹார்ட் ட்ரைவில் ஒரு பேட் செக்டார் (bad sector) என்பது, நாம் டேட்டா ஸ்டோர் செய்யும் இடத்தில் சிறிய பழுதான இடம் ஆகும். இந்த இடத்தில் எந்த டேட்டாவினையும் எழுதவோ, அதிலிருந்து படிக்கவோ முடியாது.

பேட் செக்டார் என்பது, நாம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் காந்த சக்தியில் இயங்கும் ஹார்ட் ட்ரைவ்களிலும் ஏற்படலாம்; தற்போது பழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ்களிலும் உருவாகலாம்.

பழுதான பகுதிகள் என இவற்றை அழைக்கலாம். இவை இரண்டு வகைப்படும். முதலாவது, சாதனப் பாதிப்பு வழியாக ஏற்படுவது. இரண்டாவது சாப்ட்வேர் புரோகிராம்களினால் ஏற்படுவது. இரண்டாவது வகையினைச் சரி செய்திடலாம்.

ஆனால், முதல் வகையில் பழுது ஏற்பட்டால், அதனைச் சுற்றி வேலி போன்ற டிஜிட்டல் தடையை அமைத்து, பயன்படுத்துவதிலிருந்து ஒதுக்கி வைக்கலாம்.

பேட் செக்டார் வகைகள்: இரண்டு வகையான பேட் செக்டார்கள் உள்ளன. இவற்றை "physical" and "logical" bad sectors என அழைக்கின்றனர். அல்லது சிலர் "hard" and "soft" எனவும் அழைக்கின்றனர்.

இவற்றில் முதலாவது வகையானது, (physical - or hard - bad sector) நேரடியான பாதிப்பில் ஏற்படுவது. ஹார்ட் ட்ரைவின் எழுதும் முனை, அந்தப் பகுதியில் தொட்டு பழுதினை ஏற்படுத்தி இருக்கலாம். சிறு தூசி அந்த இடத்தில் அமர்ந்து, இடத்தைப் பாழாக்கி இருக்கலாம்.

சாலிட் ஸ்டேட் டிஸ்க்கில், குறிப்பிட்ட செல் பயன்படுத்தும் வாழ்நாள் காலத்தினை இழந்திருக்கலாம்.இது போன்ற பழுதுகளைச் சரி செய்திட முடியாது.

 இன்னொரு வகையான logical - or soft - bad sector என்பது, குறிப்பிட்ட அந்த பகுதி செயல்படாமல் இருப்பது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் அந்தப் பகுதியில் உள்ள டேட்டாவினைப் படிக்க முயன்று, பின் பழுதினை நீக்கும் தன் குறியீடுகள் அதனுடன் ஒத்துப் போகாமல் இருப்பதனைக் கண்டறிந்து, அங்கு ஏதோ பிரச்னை இருப்பதை அறிந்து உணர்த்துவதாகும்.

இந்த பகுதி பேட் செக்டார் எனக் குறிக்கப்படும். இதனை, அந்தப் பகுதியில் zeros எழுதுவதன் மூலம் சரி செய்துவிடலாம். முன்பு இதனை குறுகிய அளவில் (lowlevel format) பார்மட் செய்து சரி செய்து வந்தனர். விண்டோஸ் சிஸ்டம் கொண்டிருக்கும் Disk Check டூல், இத்தகைய பழுதுகளை சரி செய்திடலாம்.

இப்படி இ மெயில் அனுப்பிருக்கிங்களா....!

இன்று உலகில் அனைத்து அலுவலக மற்றும் வெளியுலக செயல்களுக்கு முக்கிய பங்காற்றுவது இ மெயில் தான் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது. இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது. வாழ்க்கை ஆனந்தமாகவும் நிறைவானதாகவும் மாறுகிறது.

ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் இமெயிலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும். நட்பும், உறவும் முறியவும் செய்யலாம்; வியாபாரம் கை கூடாமல் போகலாம்; வேலை கிடைக்காமல் போகலாம்.

 நாம் பிறருக்கு அனுப்பும் மின்னஞ்சல் இப்படித்தான் இருக்க வேண்டும் என இல்லை ஆனால் அதை வாசிப்பவர் நிச்சயம் சில எதிர்பார்ப்புகளுடன் தான் வாசிப்பார் மேலும் பிறருக்கு அனுப்புகிற மின்னஞ்சல் கடிதங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய நல்வழிகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா....

கம்பியூட்டரில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்

இன்று நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.

ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

கம்பியூட்டர் பராமரிப்பு மற்றி சில அடிப்படைகள்

கம்பியூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் மனிதனின் மூன்றாவது கையாகவே மாறிவிட்டது எனலாம். மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வதை நாம் தினசரி சாலைகளில் பார்க்கலாம் நண்பரே.

இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம் இவை மிக எளிய வேலைகள் தான் ஆனால் பெரும்பாலானோர் இந்த வேலைகளை செய்வதில்லை அது என்ன வேலைகள் என்பதை பாருங்கள்.