நீங்கள் இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன.
நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு, நீங்கள் செல்லலாம்.
மீண்டும் வந்து பார்க்கிற போது "Session Expired" என்ற செய்தி திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எந்தவிதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம்.
அதன் எதிரொலியே இது. எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம்.

No comments:
Post a Comment