Saturday, 23 November 2013

விண்டோஸ் 8 வெர்ஷன் மட்டும் தான் இனி...!

இன்று நாம் பயன்படுத்தும் விண்டோஸ் 8 ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விளைந்த படைப்பு அல்ல. 20 ஆண்டுகளுக்கு கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பு' என மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டாளர்களின் நட்புப் பிரிவின் தலைவர் பில் கோபெட் அறிவித்துள்ளார்.

இது விண்டோஸ் 8 தொகுப்பினைச் சந்தைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட கூற்று அல்ல. கம்ப்யூட்டர் பயனாளர்களை மையப்படுத்திச் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்காலக் கணிப்பாகும்

2014 ஏப்ரல் மாதம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டை நிறுத்திவிடும்போது, எக்ஸ்பி பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் (தற்போது 42%) தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றியே ஆக வேண்டும்.

அவர்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை விரும்பவில்லை என்றால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்காகவது மாறுவார்கள். அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை யார் விரும்புவார்கள்?

ஐபோன், ஆண்ட்ராய்ட் போன் மற்றும் ஐபேட் பக்கம் சென்ற நிறுவன வாடிக்கையாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி என அனைத்தையும் ஒருங்கே அணைத்துச் செல்லக் கூடிய, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத்தான் மாறுவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

அதுமட்டுமின்றி, கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பயனாளர்கள், டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தினை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்றும் மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது


அதனால் தான், எதிர்ப்பு தோன்றிய போதும், ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாத யூசர் இன்டர்பேஸை கட்டாயப்படுத்துகிறது. பல புரோகிராம் டெவலப்பர்கள், தொடுதிரை வழி இயங்கும் வகையிலேயே தங்கள் புரோகிராம்களை அமைக்க, விண்டோஸ் 8 தொடுதிரை இயக்கம் கை கொடுக்கும்.


இது அவர்களுக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் பெரியஅடியாக இருக்கும். எனவே தான், சாதுர்யமாக, விண்டோஸ் 8ல் தரும் தொடுதிரை யூசர் இன்டர்பேஸினை மைக்ரோசாப்ட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

No comments:

Post a Comment