Saturday, 23 November 2013

வந்தாச்சு சூப்பர் பிரிண்டர்....!

இன்று பிரிண்டர் என்றாலே நம் அனைவரது முதல் சாய்ஸ் எச்.பி தான் அந்த வகையில் தற்போது எச்.பி புதிய பிரிண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் பெயர் HP OfficeJet Pro 3620 Black & White e-AIO என்ற பிரிண்டர் ஆகும் தற்போது பிரிண்டர் வாங்கும் அனைவரது முதல் சாய்ஸும் தற்போது இந்த பிரிண்டர் தான்.

மேலும் இந்த பிரிண்டரை பயன்படுத்திய ரவிராஜ் என்ற வழக்கறிஞர் கூறுகையில் அவரது ஆபிஸில் உள்ள இரண்டு கேனான் பிரிண்டர் செய்யும் வேலையை இந்த ஒரு பிரிண்டர் செய்கிறது என்று கூறுகின்றார்.

இது மற்ற பிரிண்டரை விட 50 சதவிகிதம் எனர்ஜியை மிச்சப்படுத்துகின்றது என்றும், இதில் 12 ஆயிரம் பேஜ்கள் பிரிண்ட் எடுக்கும் வரை இதிலிருக்கும் மை தீருவதில்லை எனவும் அவர் கூறுகிறார்.

ஒரு நிமிடத்திற்கு 19 பக்கங்களை பிரிண்ட் செய்யும் இந்த பிரிண்டர் இது மத்த பிரிண்டர்களை ஒப்பிடுகையில் இது சற்று அதிகமே.

மேலும் இதில் பிரிண்ட் அவுட் பேப்பர்களில் கருப்பு மை பூசிய படி வருதல் அல்லது தெளிவு இல்லாத பிரிண்ட் ஆகியவை இந்த பிரிண்டரில் எப்போதும் வருவதில்லை.

இதோ அந்த HP OfficeJet Pro 3620 Black & White e-AIO பிரிண்டரின் படங்களை நீங்களே பாருங்கள் நண்பரே....

No comments:

Post a Comment